spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

விஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

-

- Advertisement -

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்களின் எதிர்கால திட்டங்களுக்கு விஜய் தேவைப்படுவார் என்று நினைக்கிறது. எனவே குருமூர்த்தி மூலம் பாஜகவினர் விஜயை தாக்கி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் குறித்தும், அதனை தொடர்ந்து விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தம் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல செய்தி நிறுவன யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூரில் 41 உயிர்களை காவு வாங்கிய கூட்டநெரிசல் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கூட்ட நெரிசலாகும். இதற்கு காரணமாக இருப்பது விஜய்தான். இதில் எங்கே செந்தில் பாலாஜி வந்தார்? மருத்துவமனைக்கு மற்றவர்கள் வருவதற்கு முன்பாக செந்தில் பாலாஜி எப்படி வந்தார் என்கிறார்கள். அதிமுகவின் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் எப்படி வந்தார்? சொந்த ஊரில் நடைபெறும் விபத்திற்கு செந்தில் பாலாஜி வருவதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு ஒரு மணிக்கு கரூர் புறப்பட்டடு செல்கிறார். மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். அதேநேரத்தில் விஜய், பதில் அளிக்க மாட்டேன் என்று நடந்து செல்கிற விதம் எப்படி? சென்னையில் 30 பேர் இறந்தது தெரியாமல் பணியாளர்களுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார். வீட்டிற்கு சென்றுவிட்டு 3 நாட்கள் கழித்து இன்றுதான் விஜய் வெளியே வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர். சுகாதார அமைச்சர் ஓடோடி சென்றார். அந்த அளவிற்கு ஆளுங்கட்சி தயார் நிலையில் இருக்கிறது.

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்களை சந்திக்க விஜய் முயற்சித்தார். அனுமதி கிடைக்காததால் திரும்பி சென்றதாக சொல்கிறார்கள். விஜய், மக்கள் உயிரிழப்பை கண்டு பயந்துவிட்டார். அவர் 3 கார்கள் மாறி மாறி திருச்சிக்கு சென்றார். விஜயை விட்டுவிடலாம். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் எங்கே சென்றார்கள்?  விஜய் அரசியலுக்கு புதியவர் என்றால் ஏன் பேரணி நடத்துகிறார்? ஏன் அரசியல் கட்சி தொடங்குகிறீர்கள்? திமுக, பாஜகவை விமர்சிக்கிறீர்கள்? பிரச்சாரத்தில் விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடுகிறபோது அங்கே மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுன்தான் விஜயிடம் சொல்கிறார் கூட்டத்தில் மக்கள் எல்லாம் செத்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று. அதன் பிறகுதான் விஜய் பயந்துகொண்டு உள்ளே வருகிறார்.

பிரச்சார இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பாக டிஎஸ்பி செல்வராஜ் அங்கே போக வேண்டாம். அதிகளவில் கூட்டம் இருக்கிறது. கூட்டநெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்தார். திருச்சி மாநாட்டிலேயே கூட்டநெரிசல் ஏற்படும் என்பதற்காக தான் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாமல் போனார். அதன் பிறகு அறிக்கையாக வெளியிட்டார். அப்போது இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? கூட்டநெரிசல் ஏற்பட்டது ஒரு விஷயம் அல்ல. அதற்கு நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். விஜயை பார்ப்பதற்காக தான் மக்கள் வருகிறார்கள். அதற்கான விஷயம் உங்களிடம் இல்லை. அரசியல் திறமையோ, அரசியல் அறிவோ உங்களிடம் இல்லை. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லை. நீங்கள் செய்யவில்லை.

கரூர் கூட்டநெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்கிறபோது அவரை கைதுசெய்ய தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று கேள்வி எழலாம். விஜய், தன்னுடைய வீட்டிற்குள் இருந்து கொண்டு பலரையும் தொடர்புகொண்டார். ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கருர் கூட்டநெரிசல் குறித்து விவாதித்தார். அதன் பிறகு விஜயிடம் தொலைபேசியில் பேசிய ராகுல்காந்தி, மீண்டும் முதலமைச்சரிடம் பேசினார். இதனை தொடர்ந்து தான், விஜயின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படவில்லை.

ஆர்எஸ்எஸ்-இடம் இருந்து விஜய் மீது கோபத்தை காட்ட வேண்டாம். அவர் எதிர்காலத்தில் நமக்கு பயன்படுவார் என்று குருமூர்த்திக்கு தகவல் போகிறது. குருமூர்த்தி பாஜகவினருக்கு விஜய் மீது கோபத்தை காட்ட வேண்டாம் என்று சொல்கிறார். அதன் காரணமாகவே விஜய் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்கிறார். ராகுலை வைத்து எப்ஐஆரில் பெயர் வராமல் மாநில அரசை தவிர்த்தார். சிபிஐக்கு போனால் நாங்கள் காப்பாற்றுகிறோம் என்கிற உறுதியை பாஜகவிடம் இருந்து வாங்குகிறார். எடப்பாடி விஜயை கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் மொத்தமாக முடிந்துவிடும். ஆனால் விஜய் எதிர்கால அரசியலுக்கு தேவை. இனி அவரால் தனியாக ஊர்வலம் செல்ல முடியாது. அதிமுக – பாஜக கூட்டணிக்குள் விஜய் வந்தால் தான் அவர் பேரணி செல்ல முடியும். அதனால் தான் எடப்பாடி, விஜயை தாக்கி பேசாமல் அமைதியாக போகிறார்.

"சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

அண்ணாமலையை அனுப்பி, விஜய்க்கு வழக்கறிஞராகவே பேச வைக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அருண் ராஜ் மத்திய அரசினுடைய ஆள்தான். இவர்கள் எல்லாம் சேர்ந்து அவரை பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி உடன் 71 இடங்கள் தருவதாக விஜய் கூட்டணி எல்லாம் பேசி இருந்தார். ஆனால் ராகுல் வர மறுத்துவிட்டார். அதன் காரணமாக தான் காங்கிரஸ் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் திமுகவை விமர்சித்தனர். விஜய், பிரதமர் மோடி, ஜெயலலிதா என எல்லோருடனும் தொடர்பில் இருந்தவர். மனசாட்சி உள்ள நபர் பொய் சொல்ல மாட்டான் என்றால், இந்த கூட்ட நெரிசலில் உங்களுக்கு பங்கு உள்ளதா? இல்லையா? உங்களுடைய மனசாட்சி உருத்தாதா? இந்த துயரத்துக்கான பதிலை விஜய் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விஜய் கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ்கள் தவெகனுடைய ஆம்புலன்ஸ் தான். கூட்டத்தில் உள்ள ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால்தான் ஆம்புலன்ஸ் வந்தது. விஜய் சந்தித்த அதே இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை நடத்தினார். ஏற்கனவே அங்கே கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், விஜய் ஆட்களை கூட்டி வருகிறார். ஆதவ் அர்ஜூன் மக்கள் இறக்கிறார்கள் என்று சொன்ன உடன், உடனடியாக வாகனத்திற்குள் சென்று புறப்படுகிறார். 3 கார்கள் மாறி திருச்சிக்கு செல்கிறார்.

அதன் பிறகு ராகுல்காந்தி, அமித்ஷா, குருமூர்த்தியிடம் பேசுகிறார். ஸ்டராட்டஜி வகுக்கிறார். சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். தமிழக அரசின் எப்ஐஆரில் விஜயின் பெயரை வராமல் பார்த்துக் கொண்டிருக்கார். தமிழ்நாடு அரசு கூட்டநெரிசல் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளது சரியான விஷயம். அருணா ஜெகதீசன், கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜயின் பங்கு என்ன என்று கண்டுபிடித்து விடுவார். அறிக்கை கிடைத்த உடன், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தமிழக அரசின் கடமையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ