spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

-

- Advertisement -

 

மின்சார ரயில்

we-r-hiring

ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதுகின்றன.

இதனையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்களுக்காக வருகிற 22 ஆம் தேதி மற்றும் 24 தேதியில் எலக்ட்ரீக் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இவ்வறிப்பானது சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி இடையே இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்து இலவசமாக இயக்கப்படவுள்ள நிலையில், தற்போது எலக்ட்ரிக் இரயில்களும் இயக்கப்படவுள்ளதால் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

MUST READ