ஓஹோ எந்தன் பேபி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்திருக்கும் திரைப்படம் தான் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தில் ருத்ராவுடன் இணைந்து மிதிலா பல்கர், அஞ்சு குரியான், மிஷ்கின், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், நவிஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மேலும் இப்படமானது 2025 ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் விஷ்ணு விஷாலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் போல் தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.