HomeBreaking Newsசெவிலியருக்கு பாலியல் சீண்டல்; திருப்பதியில் டாக்டர் கைது

செவிலியருக்கு பாலியல் சீண்டல்; திருப்பதியில் டாக்டர் கைது

-

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை (மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்) செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பவர் உல்ஹாஸ் பாண்டுரங்கி (58) வளரசவாக்கத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பாதிக்கபட்ட செவிலியர் பெண் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த மருத்துவர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்த நிலையில் விசாரணைக்கு வரமால் இருந்ததையடுத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர்

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் மருத்துவர் உல்ஹாஸ் பாண்டுரங்கி திருப்பதியில் மறைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்பதி விரைந்த காவல்துறையினர் இதய அறுவை சிச்சை மருத்துவரை திருப்பதியில் கைது செய்தனர். திருப்பதியில் இருந்து கைது செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மருத்துவ வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ