HomeBreaking Newsவிஜய் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பாங்க : விஜய்யால் எனது வாக்குகள் குறையாது - சீமான்...

விஜய் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பாங்க : விஜய்யால் எனது வாக்குகள் குறையாது – சீமான் பேட்டி

-

விஜய் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பாங்க - விஜய்யால் எனது வாக்குகள் குறையாது - சீமான் பேட்டி

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது,” விஜய்-ன் வருகையால் எனது வாக்குகள் குறையாது. எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களை சந்தித்து தான் வந்தனர். ஆனால் திரைத்துறையில் இருந்து வந்த நான் மக்களை சந்தித்து தான் அரசியலுக்கு வந்தேன்.
ஒரு நடிகரை பார்ப்பதற்காக கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே. விஜய் ரசிகர்கள் சிலர் எனக்கு தான் வாக்களிப்பார்கள்” என்றார்.

MUST READ