spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிருச்சியில் நடந்த கூத்து A to Z! மைக் வேலை செய்யாத பின்னணி! விஜய் மீது...

திருச்சியில் நடந்த கூத்து A to Z! மைக் வேலை செய்யாத பின்னணி! விஜய் மீது பாய்கிறது வழக்கு?

-

- Advertisement -

விஜய் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், அனைத்தும் மீறப்பட்டிருக்கிறது. விஜயே தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி தான் பேசினார் என ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் சுற்று பயணம் குறித்து ஊடகவியலாளர் மில்டன் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய், திருச்சியில் சுற்று பயணத்தை தொடங்கிய நிலையில், விமான நிலையத்தில் இருந்து பிரச்சார இடத்திற்கு மிகவும் தாமதமாக சென்றுள்ளார். இதற்கு முன்பாக 2021 தேர்தலின்போதும் கூட சைக்கிளில் சென்று வாக்களித்தார். அப்போது பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. பிரச்சார பயணத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட போதும் கூட அவர் வீட்டில் இருந்து விமான நிலையம் வந்ததும், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்ததும், எந்த வித சிக்கலும் இல்லாமல் வந்துவிட்டார். விமான நிலையத்தில் இருந்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் மரக்கடை பகுதிக்கு வருவதற்கு தான் 5 மணி நேரம் ஆனது. அங்குள்ள ஊடகவியலாளர்களும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் விஜய் வாகனம் நகர முடியாமல் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் நம்முடைய கேள்வி எங்கு எழுகிறது என்றால்? பாதியில்  விஜய் மைக்கை வைத்துவிட்டு கீழே இறங்கி வண்டியை நகர்த்திய பின்னர் அரியலுர் செல்ல வண்டியை எடுத்தார். அவர் பேசி முடித்த உடன் ரசிகர்கள் கூட்டம் கலைந்துசென்றுவிட்டது. அடுத்த 100 மீட்டர்  தொலைவிற்கு எந்த கூட்டமும் இல்லை. ஒரு கூட்டம் ஒரு இடத்தில் இருக்கிறது. இன்னொரு இடத்திற்கு அது கடத்தப்படவே இல்லை. கலைந்து போகிறது என்றால்? இதை 5 மணிநேரம் செய்தியாக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் விஜய் தரப்புக்கு இருந்ததா? என்கிற கேள்வி எழுகிறது.

நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியை தொடங்கியபோது இதைவிட பல மடங்கு கூட்டம் கூடியது. அதற்கு பிறகு அவர் பயணம் செய்த இடங்களில் எல்லாம் கூட்டம் கூடிக் கொண்டே தான் இருந்தது. கடைசியாக அவர் வாங்கிய வாக்குகள் 3 சதவீதமாகும். இந்த 3 சதவீதத்திற்கு காட்டிய கூட்டமும், மைய நீரோட்ட ஊடகங்களின் விளம்பரங்களும் மிகப்பெரிய அளவிலானது. எனவே சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சியாக மாறும்போது கூட்டம் கூடுவது என்பது இயல்பானது. இதை பெரிய விஷயமாக ஊடகங்கள் பூதாகரமாக்குகின்றன. திருச்சி மரக்கடை பகுதி என்பது குறுகலான சாலையாகும். அங்கு விஜய் போன்ற பெரிய நடிகர் வரும்போது இயல்பாக ஒரு கூட்டம் கூடவே செய்யும். ஒரு பிரச்சார நிகழ்வில் பேசுவது தான் மிகவும் முக்கியமானது. அதையே கோட்டை விடும் கூட்டமாக தான் விஜயின் கட்சி உள்ளது. இந்த கூட்டம் தமிழ்நாட்டையே காப்பாற்ற போகிறது என்று நம்மிடம் உருட்டுகிறது.

திமுக சொன்னீர்களே, செய்தீர்களா? என ஏற்கனவே அதிமுக கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு திமுகவும் விளக்கம் அளித்துக் கொணடிருக்கிறது. அதை  செய்யத்தான அதிமுக இருக்கிறதே. நீங்கள் புதிதாக என்ன கேள்வி கேட்டீர்கள்? அல்லது நீங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று சொன்னீர்களா? ஆடியோ சரியாக கேட்கவில்லை. அதனால் விஜய், 10 நிமிடங்களில் பேசிவிட்டு போய்விட்டார். அடுத்து அடுத்த சனிக்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டுவார். அரசியல் அற்ற தன்மையோடு இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவது என்பது பெரிய சாபக்கேடாக இருக்கிறது. 23 நிபந்தனைகள் விதித்தபோது,  எங்களை ஒடுக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால் அவர்கள் விதித்த அனைத்து விதிமுறைகளையும் மீறிவிட்டனர். விஜய், 10.30 மணிக்கு பேச தொடங்கி 11 மணிக்கு முடிக்க வேண்டும் என்கிறபோது, அவரே வந்து பேசுவதற்கு மணி 3 ஆகிவிட்டது. அனைத்து நிபந்தனைகளையும் மீறிய பிறகு வழக்கு பதிவு  செய்யாமல் இருப்பது மிகப் பெரிய தவறாகும். தமிழ்நாடு அரசு, காவல்துறை உரிய முறையில் வழக்குப்பதிவு செய்யலாம். சட்டம் எல்லோருக்கும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். எனவே விதிகளை மீறி மரங்கள், மின்கம்பங்கள் மீது ஏறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அடுத்த முறை விஜய் அனுமதி கேட்டால் இன்னும் கடுமையான நெருக்கடிகளை தர வேண்டும். அது எதற்காக என்றால், விஜயை பார்க்க வருகிற அப்பாவி இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது.

விஜய்-க்கு ஒரு பிரச்சார நிகழ்வை நடத்த தெரியவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இதை செய்வேன் என்று பேச தெரியவில்லை. திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? போட மாட்டீர்களா? என்று கேள்வியை கேட்பதற்கு நீங்கள் யார்? அது உங்களுடைய வேலையா? நான் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்வேன். டீசல் விலையை குறைப்பேன் என்று சொல்லலாம். தரமான கல்வி, மருத்துவம் தருவேன் என்று சொல்கிறார். அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளனர். வெற்றி  பேரணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். எதற்காக உங்கள் பின்னால் நாங்கள் திரள வேண்டும்? திமுக சமச்சீர் கல்வி என்று கொண்டு வந்தது. அப்படி நீங்கள் ஏதாவது கொண்டு வருவீர்களா? மருத்துவம் ஏற்கனவே இலவசம் தான். அதில் என்ன சுத்தமான மருத்துவத்தை தருவேன் என்பது. அவ்வளவு பெரிய வண்டியில் நின்று விஜய் பேசுகிறார். அதில் நான் என்ன செய்யப் போகிறேன். என் பக்கத்தில் நீங்கள் ஏன் வர வேண்டும் என்பதற்கு பதிலும் இல்லையே? விஜயை ஏன் அரசியலாக விமர்சிக்க வில்லை என்கிறார்கள். அப்படி விமர்சிக்க விஜய் அரசியலே பேசவில்லையே. அரசியலே பேசாத ஒரு கூட்டம், மளுட்டையாக ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டே இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ