spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன்...

பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்

-

- Advertisement -

ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில், ஆஷா பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் AITUC தேசியத் துணைத் தலைவருமான சுப்பராயன் மற்றும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மலைப் பிரதேச கிராம மக்களுக்கும் முதன்மை சுகாதார மையங்களுக்கும் இடையே பாலமாக இருந்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து நாட்களிலும் தொடர் பணி புரிந்து வரும் ஆஷா பணியாளர்களை ‘செயல்பாட்டாளர்கள்’என்று வகைப்படுத்துவதை ஏற்க இயலாது என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மாதம் ரூ.5000-க்கும் குறைவான ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் மாதம் ரூபாய் பத்தாயிரமும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரமும் தொகுப்பூதியமாக வழங்கும் நிலையில் தமிழகத்தில் வெறும் ஐந்தாயிரம் மட்டுமே வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்பணி நிரந்தரம், மாதம் ரூ.24,000 ஆயிரம் தொகுப்பூதியம், 12-ம் வகுப்பு படித்த, 45 வயதுக்குள் இருக்கும் ஆஷா பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட எந்த வித  கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய ஆஷா பணியாளர்கள், இது குறித்து முதல்வரிடமும் பல முறை மனு அளித்தும் பலன் கிடைக்கவில்லை என்றனர்.

we-r-hiring

போராட்டத்தை தொடர்ந்தாவது தங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை

MUST READ