Homeசெய்திகள்சினிமாஇதென்னப்பா புது ட்விஸ்ட்-ஆ இருக்கு... டான் இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் விஜய்!?

இதென்னப்பா புது ட்விஸ்ட்-ஆ இருக்கு… டான் இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் விஜய்!?

-

‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விக்கிபீடியா பக்கத்தில் காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ‘லியோ’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் வெளியாகும் முன்னரே பல ரெக்கார்டுகளை உடைத்து வியாபாரம் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

 

இந்நிலையில் விஜய் அடுத்ததாக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அட்லீயுடன் மீண்டும் அவர் புதிய படத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் விஜய் ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக விக்கிபீடியா பக்கத்தில் காணப்படுகிறது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

அட்லீயின் இணை இயக்குனராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படத்தை இயக்கினார். முதல் படத்திலே 100 கோடி வசூல் செய்த படத்தை கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் சிபி.

அட்லீ போல அவரும் மிகப்பெரிய கமர்சியல் இயக்குனராக வலம் வருவார் என்பது நிச்சயம்.

MUST READ