spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரோமியோ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்..... பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி!

ரோமியோ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்….. பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருந்த ரோமியோ திரைப்படம் கடந்த ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி நடித்திருந்தார். இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்க குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார்.ரோமியோ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்..... பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி! இந்த படத்தில் விஜய் ஆண்டனி ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் யூட்யூப் சேனல் மூலமாக திரைப்படங்களை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் ரோமியோ திரைப்படத்தையும் விஜய் ஆண்டனியின் நடிப்பையும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து வரும் திரு .ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் சொல்வதை எல்லாம் எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்… மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்… ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ