- Advertisement -
70 வயதாகியும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் 40 வயதில் நாயகியாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அந்த அசாதாரணத்தையும் சாத்தியமாக்கியது த்ரிஷா தான். விக்ரமுக்கு ஜோடியாக சாமி படத்தில் நடித்த த்ரிஷா முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே முன்னேறினார். பின் தெலுங்கு பக்கம் திரும்பிய த்ரிஷா அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இறுதியாக த்ரிஷா நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பும் கேட்டார்.




