- Advertisement -
தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகள் சூழ சிம்பு புகைப்படம் எடுத்துக் கொண்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்புவும், ஜெயம்ரவிக்கு மாற்றாக அசோக் செல்வனும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்தி நடிகர்கள் அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோர் இணைந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. அங்கு சிம்பு மற்றும் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவின் முதல் தோற்ற வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.
https://x.com/i/status/1794999196099264952