மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்தும் நடிகை சாயிஷா
- Advertisement -
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா. தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சார்மி என அன்புடன் அழைக்கப்படும் சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா, 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதனிடையே இவரும், கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாயிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. வனமகன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகை சாயிஷா, அடுத்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்
இறுதியாக சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடி இருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிய சாயிஷா, குழந்தை, குடும்பம் என பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க சாயிஷா திட்டமிட்டிருப்பதாகவும், பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வௌியாகி உள்ளது