spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் டிரைலர்!

எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் டிரைலர்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் D54 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் இவர், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து க்ரித்தி சனோன் நடித்துள்ளார். கலர் எல்லோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படமானது தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணியில் வெளியான ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களை போல் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதாவது காதல் தோல்வி அடைந்த ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பது போல் தெரிகிறது.

we-r-hiring

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ