யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் சாமியார் கலையரசன் என்கிற அகோரி கலையரசன். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் ஒன்றை நிறுவி முன் ஜென்மம் குறித்து பேசி அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவருக்கு டிக்டாக் மூலம் பழக்கமான பிரக லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சர்ச்சை அகோரி கலையரசன் கடந்த மாதம் 28ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், பழனியை சேர்ந்த அகோரி கலையரசனுக்கு சென்னையை சேர்ந்த பிரகலட்சுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பழகிய நிலையில் 9 நாட்கள் பழக்கத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், சென்னை பெரம்பூரில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் பெரம்பூரில் குடும்பத்துடன் இருந்த நிலையில் அதே வீட்டில் பிரகலட்சுமி சகோதரர் அகோரி கலையரசனின் மச்சான் பிரவீன் மற்றும் மாமியார் சசி லேகா ஆகிய இருவரும் அந்த வீட்டில் வந்து தங்கி கூட்டு குடும்பமாக இருந்து வந்த நிலையில் தங்களுக்குள் தனித்தன்மை வேண்டும் என்ற காரணத்திற்காக தனியாக சென்று வாழலாம் என பலமுறை தனது மனைவியை அழைத்த நிலையில் அவர் மறுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் பல முறை கருத்து முரண் ஏற்பட்டதாகவும், இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், தன் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எழுப்பி சண்டை செய்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி மாமியார் மச்சான் அனைவரும் குடித்துவிட்டு தன்னை பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது என கூறி அடுத்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாகவும் மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அகோரி கலையரசன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை மனைவி மாமியார் மச்சான் சாமியார் வழியில் இல்லாமல் ஆன்மிக வழியில் இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதித்து கொடுக்கும்படி அடித்து துன்புறுத்தியதாகவும்,இதனால் இதற்கு மேல் இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று எண்ணி தனது அம்மா வீடான பழனிக்கு தப்பி சென்று விட்டதாகவும் பிறகு தான் அம்மா வீட்டிற்கு சென்ற விவரத்தை சில தினங்கள் கழித்து தனது மனையிடம் தெரிவித்து விட்டததகவும் இதனை அடுத்து தனது மனைவி பிரகலட்சுமி மற்றும் தனது மச்சான் பிரவீன் ஆகிய இருவரும் சேர்ந்து தனது வீட்டிற்கு வந்து திண்டிவனத்தில் ஒரு நில தகராறு இருக்கிறது அதனை சரி செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் தானும் திண்டிவனம் வரை வந்து அந்த பிரச்சனையை சரி செய்து கொடுத்த பின்பு சென்னையில் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தன்னை தாக்கியதாகவும், மீண்டும் தன்னை தவறான வழியில் பணம் சம்பாதித்து கொடுக்கும்படியும் துன்புறுத்தியதாகவும் இதனால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தன்னை துன்புறுத்திய தனது மனைவி பிரகலட்சுமி மற்றும் மச்சான் பிரவீன் இதற்கு குழந்தையாக இருந்த தனது மாமியார் சசி லேகா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மீதான விசாரணை மேற்கொள்ளும் படி மாற்றப்பட்டது. இன்று அகோரி கலையரசன் மற்றும் அவரது மனைவி பிரகலட்சுமி ஆகிய இருவரும் நேரில் அழைத்து விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அகோரி கலையரசன், தனது மனைவி மற்றும் மச்சான் அவரது குடும்பத்தினர் நன்றாக குடித்துவிட்டு தன்னை ஆயுதங்கள் கொண்டு பல்வேறு முறையில் தாக்கியதாகவும் தன்னை தவறான தொழில் செய்ய சொல்லி துன்புறுத்ததாகவும் குறிப்பாக கோடீஸ்வரர்களுக்கு பினாமி போல செயல்படும்படி தவறான செயல்களில் ஈடுபட கோரி வற்புறுத்தியதாகவும் தான் அவர்கள் கூறிய வேலைகளில் எதையும் செய்யாத காரணத்தால் தன் மீது பாலியல் ரீதியாக பெண்களை சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்து தனது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
அவரிடம் புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த அகோரி, தான் கொடுத்த புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், தனக்கு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் அதனை நீதிமன்றத்தில் சென்று தான் பெற்றுக் கொள்வதாகவும் இதற்கு மேல் சமூக வலைதளங்களில் எங்கேயும் தான் பேட்டி தர மாட்டேன் என காவல்துறையின் தரப்பில் தன்னிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் கலையரசனின் மனைவி பிரகலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னையும் தனது தம்பியையும் கலையரசன் தாக்கியதாகவும் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தன்னை பற்றி சமூக வலைத்தள ஊடகங்களில் தவறாக சித்தரித்து பேசி வருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் அளித்துள்ளதாகவும் தனது விவாகரத்து தொடர்பான விஷயங்களை நீதிமன்றத்தில் சென்று அணுகும்படி காவல் துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதன்படி தான் செல்ல இருப்பதாகவும் கலையரசன் சொல்வது முற்றிலும் பொய் எனவும் அவருடன் தான் சமாதானமாக செல்ல விரும்பவில்லை. அவருடன் தான் வாழ விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.