Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் 22 பைக்குகள் திருடி மது,மாது என உல்லாச வாழ்க்கை…! பிரபல திருடன் கைது!

சென்னையில் 22 பைக்குகள் திருடி மது,மாது என உல்லாச வாழ்க்கை…! பிரபல திருடன் கைது!

-

- Advertisement -

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக சூளைமேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சென்னையின் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய ரசூல்மொய்தீன்(50) என்பது தெரிய வந்தது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சென்னை எம்எம்டிஏ பேருந்து நிலையம் அருகே ரசூல்மொய்தீனை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பைக் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் 22 பைக்குகள் திருடி மது,மாது என உல்லாச வாழ்க்கை…! பிரபல திருடன் கைது!அவரிடம் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ரசூல் மொய்தீனின் பெற்றோர் அவர் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டன்னர். உறவினர்கள் யாரும் ரசூலை கண்டு கொள்ளவில்லையாம். இதையடுத்து மும்பை சென்று அங்குள்ள ஒரு வளையல் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

மும்பையில் கடந்த 1992 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் எதிரொலியாக ரசூல் தமிழகம் திரும்பியுள்ளார். சென்னையில் கார் டிரைவராக பணியாற்றியுள்ளார். பிறகு கோவை சென்று அங்கு டிரைவர் வேலை என கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். போதிய வருமானம் இல்லை. எனவே திருட்டு தொழிலில் இறங்கியுள்ளார்.இருசக்கர வாகனங்களை திருடி மது, மாது என ஜாலியாக இருந்துள்ளார்.

கோவையில் மட்டும் 70 இருசக்கர வாகனங்கள் திருடி விட்டது தொடர்பாக கைதாகி கடந்த 2018 முதல் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த பின் திருச்சி, வேலூர் நகரங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.

அதன் பிறகு சென்னை வந்து கைவரிசை காட்ட தொடங்கி உள்ளார். சென்னை கடற்கரை தொடங்கி மறைமலைநகர் வரையும், அதேபோல பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து திருநின்றவூர் வரையும் மின்சார ரயிலில் தினமும் செல்வாராம். ரயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து, ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தால் உடனே இறங்கி வாகனங்களை திருடி வந்துள்ளார்.

வாகனங்களை  scrabக்கு போடுவது தொடர்பாக Googleல் தேடி உள்ளார். அப்போது பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த தனது நண்பர் பிரசாந்த் என்பவர் மூலம், ரசூல் மொய்தினீடம் திருட்டு வாகனங்களை வாங்கியுள்ளார்.

அதை புதுப்பேட்டையில் பழைய வாகனங்களை வாங்கும் இதயத்துல்லா என்பவரிடம் விற்றுள்ளார். இதற்கான தொகையை இதயத்துல்லா வெங்கடேஷ் பிரசாத்துக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

சென்னையில் 22 வாகனங்களை திருடியதாக ரசூல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் ஒரு வாகனம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற 21 வாகனங்களை உடைத்து ஸ்கிராப் sales செய்துள்ளார். இதயத்துல்லா திருட்டு வாகனங்களை விற்ற பணத்தில் மது, மாது என ரசூல் ஜாலியாக பொழுதை கழித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பைக் திருடன் ரசூல் மொய்தீன், வாகனங்களை வாங்கி விற்ற பிரசாந்த், இதயத்துல்லா ஆகிய மூன்று பேரையும் கைது செய்த சூளைமேடு போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர். பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்தை தேடி வருகின்றனர் என்பது குறுப்பிடதக்கது.

MUST READ