அட்டப்பாடியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியிருந்த நிலையில், அவர்களின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளிக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்ற 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அட்டப்பாடி என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. கடந்த 2018 ஆம் ஆண்டில் பசி கொடுமையால் அந்தப் பகுதியில் உள்ள பல சரக்கு கடை ஒன்றிலிருந்து அரிசியை திருடி இருக்கிறார். அப்போது அவர் அரிசியை திருடி விட்டதாக சொல்லி ஒரு கும்பல் அந்த இளைஞரை கொடூரமாக தாக்கியது. அதை தங்கள் செல்போனிலும் வீடியோவாக எடுத்து ரசித்தார்கள்.
இது தெரிய வந்ததும் போலீசார் து சென்று மதுவை மீட்டனர். ஆனால் வரும் வழியிலேயே ரத்தம் கக்கி மது பரிதாபமாக உயிரிழந்தார். மதுவின் பிரேத பரிசோதனை அறிக்கை தான் தேச பிரச்சனையானது. அவரது வயிற்றில் ஒரு பருக்கை அளவு கூட உணவு இல்லை என்பது தெரிய வந்தது. பசி கொடுமையால் தன் வயிறு நிறையும் அளவுக்கு அரிசியை எடுத்துச் சென்றவரை கொலை செய்துவிட்ட கொடூரம் அதன் பின்னர் தான் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த கொலை வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கேரளா மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 122 சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சித்தி உசை 14 பேர் குற்றவாளிகள் என்று நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 16 பேரில் அப்துல் கரீம், அனீஸ் ஆகிய இரண்டு பேர் மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். முனீர் என்பவர் கொலை குற்றத்தில் ஈடுபடாததால் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளி உசேனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட து விதிக்கப்பட்டிருக்கிறது.