மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் சிக்கிய மாநகராட்சி டேங்கர் லாரி, பின்புறமாக இழுக்கப்பட்டு கதலை கீழாக பள்ளத்திற்குள் புதைந்தது. டேங்கர் லாரியில் இருந்த ஓட்டுநர் உடனடியாக லாரியில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புனே மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே லாரி பள்ளத்தில் சிக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.