Homeசெய்திகள்இந்தியாபாஜகவின் கொள்கை அச்சத்தை விதைப்பது- ராகுல்காந்தி

பாஜகவின் கொள்கை அச்சத்தை விதைப்பது- ராகுல்காந்தி

-

டெல்லியில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவரது தாய் சோனியா, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

டெல்லி எல்லையில் நடைபயணத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அவர்கள் வெறுப்புணர்வுகளை பரப்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால் நாட்டின் சாமானியர்கள் இப்போது அன்பைப் பற்றி பேசுகிறார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும், லட்சக்கணக்கானோர் யாத்திரையில் இணைந்துள்ளனர். நாங்கள் அன்பை பரப்புகிறோம். எந்த பாகுபாடும் பார்க்காமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதுதான் இந்த நடைபயணத்தின் நோக்கம். வெறுப்புணர்வு சந்தையில் அன்பு என்ற கடையை திறக்கிறேன்.” என்றார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். இந்த பயணம் இதுவரை 9 மாநிலங்களைக் கடந்து ஜனவரி இறுதியில் ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய ஒன்பது மாநிலங்களில் 46 மாவட்டங்களில் சுமார் 3,000 கிலோமீட்டர் தூரத்தை 108வது நாளாக ராகுல்காந்தி கடந்துள்ளார்.

MUST READ