spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் - வழக்கறிஞர் அருள்மொழி 

பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி 

-

- Advertisement -

பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இளம் பேச்சாளர்களின் கருத்தியல் பேச்சரங்கம், சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் அறநிலை துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலையில் எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருத்தினராக திராவிட கழக பிரச்சாரம் செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்த காலகட்டத்தில் ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்றார்.

ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் செழிப்பான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள். 1927 ல் அலமேலு மங்கை தாயார் அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எழுத்து மூலம் ஆதரவு கொடுத்து சுயமரியாதைக்கு வித்திட்டது திராவிடம் என்றார். அதற்கான விடை தான் தற்பொழுது பெண்கள் மருத்துவர், வழக்கறிஞர், பொருளாதார வல்லுநர்,பேச்சாளர் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறோம் என்றார்.

பிரதமர் அவர்கள் குலத் தொழில் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் கடன் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இங்கு அனைத்து சாதியினரும் அர்ச்சராக மட்டுமல்ல பெண் ஓதுவார்கள் வர முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளது திராவிடம் மாடல் என்றார்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் கலைஞரை வைத்து தான் அரசியல் நடந்தது . 50 ஆண்டுகள் அரசியல் போக்கையே தீர்மானித்தவர் கலைஞர். தமிழகத்தில் முதன் முதலில் 1967இல் திமுக அரசு வந்த போது பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தொகுதிக்கு ஒரு ரேஷன் கடைகள் கொண்டு வந்து பட்டினி சாவு இல்லாமல் செய்தவர் கலைஞர்.

இன்று பாசிசமா பாயாசமா என அரசியல் பற்றி தெரியாதவர்கள் பேசினால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்ற அவர் விஜயின் பேச்சுக்கு அவர் பாணியில் சோஷலிசம், கேப்பிட்டலிசம், பாசிசம் பற்றி பாரதியார் எழுதிய கறவை மாடு கதையை கூறினார்.

முன்னதாக “என் உயிரினும் மேலான ” என்ற பேச்சு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 182 பேச்சாளர்கள் கருத்தியல் மேடைகளில் பேச வைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஆணைக்கினங்க போட்டியில் வெற்றி பெற்ற இளம் பேச்சாளர்கள் கீர்த்தனா, சிவரஞ்சனி ஆகியோர் இரண்டு தலைப்புகளில் பேசினார்கள்.

MUST READ