எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் எடப்பாடி: ராஜன் செல்லப்பா
எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு பார்ப்போம், எது எம்.ஜி.ஆர்-ஐ ஒட்டி வருதுன்னு பாருங்க. எம்ஜிஆர் போன்ற குணத்தை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் தொப்பி அணிந்து அழகு பார்த்த அழகு தொண்டர்கள். பாஜக கொள்கையை விரும்பவில்லை, ஆனால் அதிமுக தொண்டர்கள் கூட்டணியை எதிர்க்கவில்லை. பாஜக கொள்கை கூட்டணி அல்ல, தேர்தல் கூட்டணிதான் கொண்டுள்ளோம்” எனக் கூறினார்.
முன்னதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ம்ஜிஆர் போன்று ஈபிஎஸ் கண்ணாடி, தொப்பி அணிந்ததைப் பார்த்து அதிமுக தொண்டர்கள், மக்கள் வேதனை” எனக் கூறினார்.