ஆன்லைன் ரம்மி தடை மசோதவிற்க்கு ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் ஆளுநர்தான் காரணம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.
நாகை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்.
ஆளுநர் தமிழகத்தில் அரசியல் செய்யக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ராகுல்காந்தியின் நடைபயணம் இந்திய அரசியலில் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும்.
நாகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் நூற்பாலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வருவர் அஜய்குமார் மண்டல், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அவரது மனைவி சந்தனா மாஜி.
கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது ரம்மி விளையாட்டை விளையாடி வந்த நிலையில், அடிக்கடி ரம்மியில் பணம் இழந்து வருவதால் கணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டை கைவிடும்படி மனைவியிடம் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் 70 ஆயிரம் ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த சந்தனா மாஜி துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மோர் பாதையில் வேலை செய்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.