spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்… நிர்வாகிகள் கையில் வெள்ளி நாணய சீக்ரெட்… அதிரடியாக களமிறங்கும்...

வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்… நிர்வாகிகள் கையில் வெள்ளி நாணய சீக்ரெட்… அதிரடியாக களமிறங்கும் விஜய்..!

-

- Advertisement -

நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதில் இருந்தே விஜய், தமிழக அரசியலில் பரபரப்பான நபராக மாறியுள்ளார். குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக், பதவிக்கு பணம் வசூலிப்பதாக புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்த புகார்கள் என தமிழக அரசியல் களத்தை தவெக பரபரப்பாக்கியது.சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் நியமன கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்கவைத்தது, மாவட்ட செயலாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்தது போன்றவற்றிற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் பொறுப்பு மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களை தற்போது அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களாக அக்கட்சியின் தலைவர் அங்கீகரித்து வருகிறார். ஏற்கனவே இருந்த மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பதாக சொல்லி, கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுப்பதாக புகார் எழுந்தது. மற்ற கட்சிகளைப் போலவே தான் இந்த கட்சியுமா என விரக்தியில் இருந்த கட்சியினரிடம் தன் கட்சியில் பணம் பேசாது உழைப்புதான் பேசும் என விஜய் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

we-r-hiring

முதற்கட்டமாக பிரச்சனையும் போட்டியும் இல்லாத மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவித்த விஜய் அவர்கள் கட்சியில் இணைவதற்காக 15000 ரூபாய்க்கு டிடி எடுத்து வர உத்தரவிட்டிருந்தார். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை இதே போல அனைவரையும் டிடி எடுத்து வரச் சொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பணம் யார் மூலமாக வந்தது என்பதை அறிய டிடி மூலமாக மட்டுமே கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசிய விஜய், கட்சிக்குள் வந்தது எப்படி என அவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, கட்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். யாரிடமும் பணம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என்றும், மீறினால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி விடுவேன் என மாவட்ட நிர்வாகிகளிடம் நேரடியாகவே எச்சரித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசியபோது புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்க வேண்டிய சான்றிதல் ஜான் ஆரோக்கியசாமியிடம் இருந்ததாகவும் அவர் வந்த கார் திடீரென ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி காரை அனுப்பி வைத்துவிட்டு, அவர் வரும்வரை வெளியே இருந்த பணிகளை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் புஸ்ஸி ஆனந்த் வெளியே சென்ற பின்னர் நிர்வாகிகளிடம் விஜய் எதுவும் பேசவில்லை என்றும், அப்படி பேசியிருந்தால் அந்த விஷயங்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் புசி ஆனந்திற்கு தெரியவரும் என்கின்றனர் அவருடைய கட்சி நிர்வாகிகள்.

இதற்கிடையே மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட வெள்ளி நாணயம் தற்போது நினைவுப் பரிசாக மட்டுமே இருந்தாலும், விரைவில் அது நுழைவு சீட்டாக மாறும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் சூட்டிங்கை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு அவரை மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்திக்க வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று இந்த வெள்ளி நாணயத்தை காட்டினால் உள்ளே அனுமதிக்கப்படும் வகையில் இந்த நாணயத்தின் பயன்பாடு மாற்றப்படும் என்கின்றனர் தவெக நிர்வாகிகள். இதற்கான அறிவிப்பையும் தனது மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் விரைவில் வெளியிடுவார் எனக்கூறப்படுகிறது.

MUST READ