Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை மேயர் தேர்தல் - திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை மேயர் தேர்தல் – திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

-

கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்த கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால் மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரங்கநாயகியை அறிவித்தனர். இதனை அடுத்து இன்று நடைபெற்ற கோவை மேயர் தேர்தலில் ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ரங்கநாயகி தவிர வேறு யாரும் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் ஒருமனதாக தேர்வானகினார். இதனை அடுத்து, மேயருக்கான அங்கியை அணிந்து வந்த ரங்கநாயகிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

MUST READ