Homeசெய்திகள்தமிழ்நாடுசி.எஸ்.கே. ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்

சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்

-

metro

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனுவமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் போட்டியை காணப்போகும் ரசிகர்கள் தங்களின் டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோவில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் போட்டியை காணும் டிக்கெட்டில் இருக்கு க்யூ ஆர் கோடு மற்றும் பார் கோடினை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், இதற்காகவே கூடுதலாக ஒன்றரை மணி நேரம் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது

அதுமட்டுமல்லாமல் அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானம் வரைக்கும் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

MUST READ