Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் அரசுக்கு போட்டியே வெளிநாடு தான்- டி.ஆர்.பி.ராஜா விடும் கதை

திராவிட மாடல் அரசுக்கு போட்டியே வெளிநாடு தான்- டி.ஆர்.பி.ராஜா விடும் கதை

-

திராவிட மாடல் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களுடன் போட்டி கிடையாது; எங்களுக்கு வெளிநாடுகளோடு தான் போட்டி என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் 30 கோடி மதிப்பில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள “டைடல் நியோ” பார்க்கை தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கட்டிடத்தில் பெயிண்டிங், ஜன்னல் உள்ளிட்டவைகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,
தொழில் வளர்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் எல்லா பகுதிகளிலும் ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் கொரோனாவிற்கு பிறகு WORK FROM HOME என்று வேலை ஆகிவிட்டது. எல்லோ குழந்தைகளும் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் “நியோ டைடல்” தமிழகத்தின் பல இடங்களில் தொடங்கப்படுகிறது.

2023ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம். 16 மாதங்களில் பணிகள் முடிவடைந்துள்ளது விரைவில் முதல்வர் திறக்கவிருக்கிறார். முதல்வர் தென் தமிழகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் காரணமாக பல திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் தொழிற்சாலை இன்று வந்துள்ளது.

கார் உற்பத்தியில் தூத்துக்குடி மிகப்பெரிய வளர்ச்சியை காண போகிறது. இன்னும் பல சந்தோசமான செய்திகள் இருக்கிறது. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என நம்புகிறோம்.

புதிய தொழில்கள் கொண்டு வருவதில் திராவிட மாடல் ஆட்சியில் பிற மாநிலங்களுடன் போட்டி கிடையாது.வெளிநாடுகளோடு தான் போட்டி. இரண்டு வெளிநாடுகளுடன் போட்டியிடக் கூடிய புதிய திட்டம் தூத்துக்குடிக்கு வர உள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றார்.

MUST READ