spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tamilnadu assembly

we-r-hiring

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025ஆம் ஆண்டு தை பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களும் பயன் பெறுவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரு.249.76 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

MUST READ