முரசொலி அலுவலகத்தின் இடம் தொடர்பான வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக புகார் எழுப்பியிருந்தது .
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடுத்திருக்கிறது . இந்த நிலையில் தான் முரசொலி அலுவலகம் இடம் தொடர்பான வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு முன்பாக
பட்டியலிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரை செய்திருக்கிறார் .
முரசொலி அலுவலக வழக்கில் இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.