தமிழக அரசு போக்குவரத்து துறையில் 25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நைனார் திண்டுக்கல்லில் பேட்டி.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற CITU முண்ணனி ஊழியர்களின் மாநில அளவிலான சிறப்பு பேரவை கூட்டம் இன்று 22.11.24 திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கழகம் மிகப்பெரிய சேவை நிறுவனமாக ஆகும் என்றும் இந்த போக்குவரத்து கழகத்தில் தினசரி 1 3/4 கோடி பேர் பயணம் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் போக்குவரத்து வசதி என்பது மிகச் சிறப்பாக உள்ளது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கம் இன்றி சேவை துறையாக செயல்படுகிறது ஆனால் இந்த சேவை துறைக்கு ஏற்படக்கூடிய இழப்பை அரசாங்கம் ஈடு கட்டுவதில்லை.
தொழிலாளர்களுடைய பணம் 15,000 கோடியை எடுத்து செலவு செய்து விட்டனர். இதன் காரணமாக பணி ஓய்வு தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் வழங்கப்படுவது இல்லை. கிட்டத்தட்ட 20 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியர் பலன்கள் வழங்கப்படவில்லை. 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலை படியும் வழங்கப்படுவதில்லை.
மருத்துவ காப்பீடும் இல்லை. இது சம்பந்தமாக நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகள் சொல்லியும் அந்தத் தீர்ப்புகளை அரசாங்கம் அமல்படுத்தவில்லை. மறுபுறத்தில் எங்களுடைய ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்படவில்லை. அதேபோல் இந்த அரசு வருவதற்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தனர். அந்த பழைய ஓய்வூத திட்டமும் அமல்படுத்தவில்லை. வாரிசு வேலைகள் கூட மறுக்கப்படுகிறது.
25,000 காலி பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்த பிரச்சனைகள் எல்லாம் முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றோம் எனவே இந்த பிரச்சனைகளை முன்வைத்து வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் 3000 பேர் கலந்து கொள்ளக்கூடிய மிகப்பெரிய தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அரசாங்கம் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டங்கள் செய்வதென்று இந்த பேரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை பொதுத் துறையாக நீடிக்கப்பட வேண்டும் இங்க தனியார் மைய முயற்சிகளை அரசு கைவிட வேண்டும். தமிழக மக்களின் பயண உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்தப் பேரவை நடைபெற்று உள்ளது. பேரவையின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். 25,0000 பணியிடங்களில் இருப்பதால் முழுமையாக பேருந்துகளை இயக்கம் முடியவில்லை.
இங்கு சி எல் பணியாளர்களை வைத்து முழுமையான பயிற்சி அளிக்காமல் பேருந்துகளை இயக்கி வருகின்றனர் எனவே எங்களது பிரதான கோரிக்கை 25,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இன்றி ஒருபுறம் இருக்க காலிப் பணியிடங்களை நிரப்பாத காரணத்தால் முழுமையான பேருந்துகளும் இயக்கப்பட முடியவில்லை. 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 17,000 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. நான்கு ஆண்டு காலத்தில் ஏறத்தாழ நாலாயிரத்தி ஐநூறு வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது முந்தைய காலகட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்த வந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். மறைமுகமாக தனியார் மையம் ஆக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது மறைமுகமாக போக்குவரத்து கழகங்களை அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி நவ.28ல் தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!