spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்

மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்

-

- Advertisement -

மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்

கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பயணத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

we-r-hiring

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில் அதிமுக மாநாடு அமையும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்தது, கட்சி சிதறுண்டது, கட்சியே இல்லை என கூறியதற்கு பேரடியாக இந்த மாநாடு அமையும். மதுரை எழுச்சி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுகவின் இந்த மாநாடு போல கடந்த காலத்தில் யாரும் மாநாடு நடத்தியதில்லை. எதிர்காலத்திலும் யாரும் நடத்தப் போவதும் இல்லை.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பேசுவதற்கு திமுகவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 17 ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த திமுக ஏன் கச்சத்தீவு ஒப்பந்ததத்தை ரத்து செய்யவில்லை. கச்சத்தீவு பற்றி பேச திமுகவிற்கு எந்த உரிமையும் இல்லை” என்றார்.

MUST READ