Homeசெய்திகள்தமிழ்நாடுதொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை- அதிமுகவினர் உறுதிமொழி

தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை- அதிமுகவினர் உறுதிமொழி

-

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கறுப்பு சட்டை அணிந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், குடும்ப அரசியல் நடத்தும் திமுகவுக்கு கொடுபிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் நாமும் சென்று நாங்களும் திமுகவை வீழ்த்துவோம் என எம்.ஜி.ஆர். சிலை முன் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி,எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு,புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் ஓபன்னீர்செல்வம், “மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, சின்னம் என்றால் இரட்டை இலை, தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைக்கோடி மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்து, அஇஅதிமுகவிற்கு வெற்றியை மட்டுமே பரிசாகக் கொடுத்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன்.

காலத்தால் அழியாத பல திட்டங்கள் மூலம் மக்கள் மனங்களையும் “தொண்டர்கள் தான் கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்ற தனது கொள்கையின் மூலம் தொண்டர்களையும் வென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் அன்னாரது கொள்கைகளை இறுதி மூச்சுள்ளவரை அடிப்பிறழாது கடைபிடிப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது மனித நேயத்தையும் மக்கள் சேவையையும் போற்றி வணங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

.

MUST READ