Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!".. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!

“தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!”.. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!

-

- Advertisement -

​நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தென்மாநிலங்களின் உரிமைகள் குறித்துத் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து, எம்பி சசிகாந்த் செந்தில் விரிவாகப் பேசியுள்ளார்."தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!".. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!

​தொகுதி மறுவரையறையும் எதிர்கால ஆபத்துகளும்
​மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்றும், இது தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தையும் பேரம் பேசும் சக்தியையும் (Bargaining Power) முற்றிலும் குறைக்கக் கூடியது என்றும் சசிகாந்த் செந்தில் எச்சரித்துள்ளார்.

we-r-hiring

​இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

​அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்கள்: மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

​அவசரச் சட்டம் மற்றும் பாதுகாப்பு: அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு விதிகளைத் தொடர்ந்து நீட்டிக்காவிட்டால், எதிர்காலத்தில் தென் மாநிலங்கள் தங்களது உரிமைகளை முழுமையாக இழக்க நேரிடும்.

​கூட்டணிக் கட்சிகளின் மௌனம்: இந்த முக்கியமான விவகாரத்தில் சில பிரதான கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உரிய முறையில் குரல் கொடுக்காமல் மௌனம் காப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றார்.

​அரசியல் கடமைகளும் கட்சிகளின் நிலைப்பாடும்
​காவிரி மேலாண்மை மற்றும் காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தேசியக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும்போது அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ​தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் தீர்மானிக்கும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில், தமிழக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளாா்.

TAPS ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏன் நிதி ஒதுக்கல?.. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சொன்ன “அந்த” முக்கியக் காரணம்!

MUST READ