தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி வருகிற 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 22ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27ம் தேதியும், திருக்கல்யாணம் அக்.28ம் தேதியும் நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக … தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.