Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

-

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸவரத்தை இணைக்கும் விதமாக ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கான பாலம் பணி முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது எஞ்சிய 500 மீட்டர் தொலைவிற்கான பாலத்தின் நுழைவில் தூக்குப்பாலம் இணைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. தண்டவாளம் அமைக்கும் பணியும் முடிவடைந்து ரயில் இஞ்சின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

pamban bridge

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் இன்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட 11 பெட்டிகள் கொண்ட ரயில் மண்டபம் பகுதியிலிருந்து பாம்பன் தூக்குப்பாலத்திலும், ரயில் பாலத்திலும் இயக்கப்பட்டது. பாலத்தின் மீது இயக்கப்பட்ட ரயிலின் வேகம் 20 கிலோ மீட்டரிலிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ