Homeசெய்திகள்தமிழ்நாடு"மத்திய அரசு 'அம்மஞ்சல்லி' கூட தரவில்லை"- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

“மத்திய அரசு ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை”- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

-

 

"மத்திய அரசு 'அம்மஞ்சல்லி' கூட தரவில்லை"- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் வியாபாரம் ஆரம்பம்… கோடிக்கணக்கில் வியாபாரம்…

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை; மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும், மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. குஜராத் வெள்ள பாதிப்புக்கு அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவளிப்பதால் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. வெள்ள நிவாரண நிதி கேட்டால் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி தூத்துக்குடி வருவதற்கு முன் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என நம்புகிறேன்.

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி… 1000 பேருக்கு அன்னதானம்…

குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மாநிலங்களுக்காக குரல் கொடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. முதலமைச்சராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய அதே குரலை நாங்களும் எழுப்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ