தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகபட்சமாக மணலி புதுநகரில் 11 செ.மீ., மாதவரத்தில் -10 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.