- Advertisement -
கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யூடியூபர் மரியா ஜோஸை சுட்டுக் கொன்றது அவரது முன்னாள் ஆண் நண்பராக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே தன்னை துன்புறுத்தியதாக மரியா ஜோஸின் வழக்கில் நீதிமன்றம் அவரது ஆண் நண்பருக்கு 1,000 டாலர் நஷ்ட ஈடு விதித்தது. நீதிமன்ற தீர்ப்பால் ஆத்திரமடைந்த மரியா ஜோஸின் ஆண் நண்பர் அவரைக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் அந்த கோணத்தில் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனா்.