ஜப்பானில் ஒருவருக்கு 4 மனைவிகள் 2 காதலிகள் இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளாக வெளியில் எங்கும் வேலைக்கு போகாமல் “ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக” (house husband) முழுநேர வேலை பார்த்து வருகிறார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் நம்ம ஊரில் ஒரு மனைவியை திருமணம் செய்து அவருடன் கடைசி வரை வாழ்ந்து வருவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. பலருக்கு அந்த வாழ்க்கை கசந்து போய் காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு விவாகரத்து கிடைத்து விடுகிறது. நிம்மதியாக பிடித்த வேறு வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்கள். சிலர் வெளியே சொல்லவும் முடியாமல், வாழ்வும் முடியாமல் “உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்” என்ற பாடலை பாடிக்கொண்டு காலத்தை கழிக்கிறார்கள்.
ஆனால் ஜப்பானில் ஒருவர் 10 ஆண்டுகளாக வெளியே வேலைக்கு செல்லாமல் மனைவிகள், காதலிகள் வருமானத்தில் “ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக” முழுநேரமும் மனைவிகளுடனும், காதலிகளுடனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஜப்பானில் ரியுதா வதனாபே என்பவருக்கு 36 வயதாகிறது. அவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் இரண்டு காதலிகள் உள்ளனர். ரியுதா வதனாபே என்ற அந்த மனிதர் தான் “திருமணத்தின் கடவுள்” ஆக விரும்புவதாகவும், 54 குழந்தைகளுக்குத் தந்தையாகவும் மாற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அவர் தனது மனைவி மற்றும் காதலிகள் சம்பாதிக்கின்ற பணத்தில் முழுவதுமாக வாழ்ந்து வருகிறார். நம்ம ஊரில் “ஹவுஸ் ஒயிப் ” (House Wife) இருப்பதைப் போன்று அங்கே வீட்டு கணவனாக (househusband) வேலை பார்ப்பதாக கூறுகின்றார். கூடுதலாக சமையல், வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் பல திருமணங்கள் செய்துகொள்வது சட்டவிரோதமாக உள்ள நிலையில் இவர் முறையான பதிவு இல்லாமல் திருமணம் போன்ற லிவ் -இன் உறவில் மனைவிகளுடன் வாழ்கிறார். ஏற்கனவே 10 குழந்தைகளை பெற்ற இவர், 54 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டுமென தெரிவித்துள்ளார்.