Homeசெய்திகள்உலகம்கூகுள் மேப்பால் பறிபோன உயிர்! அமெரிக்காவில் சோகம்

கூகுள் மேப்பால் பறிபோன உயிர்! அமெரிக்காவில் சோகம்

-

கூகுள் மேப்பால் பறிபோன உயிர்! அமெரிக்காவில் சோகம்

அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி சென்று உடைந்த பாலத்திலிருந்து காருடன் விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

us-man-follow-google-map-and-fall-off-from-bridge:கூகுள் மேப் காட்டிய வழியை நம்பிச் சென்று உடைந்த பாலத்திலிருந்து காருடன் விழுந்து உயிரிழந்த நபர்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த பிலில் பேக்சோன், கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் மேப் காட்டிய வழியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். வழியில் உடைந்த பாலம் வந்துள்ளது. அதை அறியாமல் அதில் பயணித்து பாலத்தின் விளிம்பிற்கு சென்ற அவர், 20 அடி உயர பள்ளத்தில் இருந்து காருடன் கீழே விழுந்தார். இதில் நிகழ்விடத்திலேயே பேக்சோனின் உயிர் பறிபோனது.

சம்பந்தப்பட்ட பாலம் சேதமடைந்து ஓராண்டு மேலாவதாகவும், பலமுறை புகார் அளித்தும் கூகுள் தனது மேப் வசதியில் அந்த பாதையை காட்டுவதால் பலரும் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாலத்திலிருந்து காருடன் கீழே விழுந்து பேக்சோனின் மனைவி அலிகா, கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கூகுள் மேப் சேவை அப்டேட் செய்யப்படாமல் அலட்சியமாக இருந்ததே தனது கணவனின் மரணத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ