“பாலா! தேடி வந்தாய் திகைக்குமொரு கதைசொன்னாய்”… கவனம் ஈர்த்த வைரமுத்துவின் ட்வீட்!

இயக்குனர் பாலாவைப் புகழ்ந்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலா தற்போது அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

bala and sruiya
bala and sruiya

இதற்கு முன்னர் சூர்யா தான் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். எனவே தற்போது அருண் விஜயை வைத்து பாலா படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

arun vijay and bala
arun vijay and bala

வணங்கான் படத்தில் வைரமுத்து தான் பாடல்கள் எழுதுகிறார். தற்போது இயக்குனர் பாலாவை புகழ்ந்து வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு சினிமா வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

அதுகுறித்து

“பாலா!

தேடி வந்தாய்;

திகைக்குமொரு கதைசொன்னாய்;

இதிலும் வெல்வாய்

உடம்பில் தினவும்

உள்ளத்தில் கனவும்

உள்ளவனைக்

கைவிடாது கலை

ஐந்து பாட்டிலும்

ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்

தீராத கங்குகளால்

பழுத்துக்கிடக்கிறது

என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்

வடித்துக் கொடுப்பேன்

போய் வா!”என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement