அசோக்செல்வன் நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூது கவ்வும், தெகிடி, பீட்சா 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’, ‘சபாநாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அசோக்செல்வன் தற்போது அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் அசோக்செல்வனுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 20) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் அசோக் செல்வன், நிமிஷா சஜயன், வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குனர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படம் எந்த மாதிரியான கதைக்களம் என்பது போன்ற மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.