Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

-

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் செங்கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்ட கரும்பு விவசாயிகள் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் செங்கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பொங்கள் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை நம்பி பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் செங்கரும்பு பயிரிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு சேர்த்து வழங்காவிட்டால் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்கும் போது அடிமட்ட விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட போவதாகவும், தமிழக அரசு செங்கரும்பு விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ