தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் மேலும் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்தும், அழகு குத்தியும், தீச்சட்டி ஏத்தியும் செல்வார்கள்.
ஆடி மாதம் இரண்டாம் வெள்ளி கிழமையான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்தார். கோயிலுக்கு வருகை தந்த முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் கோயில் உள்ளே இருந்த கொடிமரத்தை தொட்டு வணங்கினார். அதனைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் உள்ள விநாயகரை வழிபட்டார். பின்னர் மூலவரை வழிபட்டார். பின்னர் கோயிலில் வழங்கபட்ட பிரசாதத்தை வாங்கி ஸ்பூன் மூலம் சாப்பிட்டார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி வருகையால் கோவில் வளாகம் முழுவதும் எஸ்.பி.வருண்குமார் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோயிலுக்கு வருகை தந்தை பார்த்த பக்தர்கள் தங்களது செல்போனில் அவரை ஆர்வத்துடன் படம் பிடித்தனர்.


