Homeசெய்திகள்தமிழ்நாடுSIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு  ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…

SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு  ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…

-

- Advertisement -

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்ட  பிஎல்ஓக்களுக்கு  ஊதியம் வழங்க 99 கோடி ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை பிறப்பித்துள்ளார்.SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு  ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியத்தை  உயர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

we-r-hiring

இதன்படி, பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து, ரூ.12 ஆயிரமாகவும், பிஎல்ஓக்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, தமிழகத்தில் 2025 – 2026ம் ஆண்டில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்ட  பிஎல்ஓக்களுக்கு ஊதியம் வழங்க 99.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 75,037 பிஎல்ஓக்களுக்கு ஊதியம் வழங்க தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நிதியை பிஎல்ஓக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு

MUST READ