Homeசெய்திகள்தமிழ்நாடுகோட்டையில் அதிரடி கிளப்பும் விஜய்! ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு 'செக்'... சடசடவென மாறப்போகும் கேபினட்!​

கோட்டையில் அதிரடி கிளப்பும் விஜய்! ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு ‘செக்’… சடசடவென மாறப்போகும் கேபினட்!​

-

- Advertisement -

​தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அக்கட்சியின் அமைச்சர்கள் மீதான பல்வேறு ஊழல் புகார்களும், சர்ச்சைகளும் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கோட்டையில் அதிரடி கிளப்பும் விஜய்! ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு 'செக்'... சடசடவென மாறப்போகும் கேபினட்!​​அமைச்சர்கள் மீதான சர்ச்சைகளும் ஊழல் புகார்களும்
பழனி கோயில் நில மோசடி விவகாரம், அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உயிரிழந்தது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து முறைகேடு என வரிசையாக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அரசின் மீதான பிம்பத்தைச் சிதைப்பதாகக் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார். மேலும், “ஒரு பெண் அமைச்சர் மீதான சர்ச்சை, சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி எனப் பல காரணங்களால் அமைச்சரவை மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது. இந்த மாற்றத்தை விஜய் மேற்கொண்டால், அது அவரது நிர்வாகத் திறமைக்கும், ஊழலுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டிற்கும் வலுசேர்க்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

​‘சூப்பர் சிஎம்’ ஆதவ் அர்ஜுனா?
அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதல்படி செயல்படும் அமைச்சர்கள் ஒருபுறம் இருந்தாலும், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு முதலமைச்சருக்கே நெருக்கடியை உருவாக்குவதாக விமர்சிக்கப்படுகிறது. “ஆதவ் அர்ஜுனா ஒரு ‘டம்மி சீப் மினிஸ்டர்’ போலச் செயல்படுவதும், சட்டமன்றத்தில் முதலமைச்சருக்குப் பதில் அவரே பேசுவதும் த.வெ.க-வின் நிர்வாக அமைப்பையே கேள்விக் குறியாக்குகிறது. கூட்டணியை முடிவு செய்வதிலிருந்து, அமைச்சரவை விவகாரங்கள் வரை அவரே முன்நிற்பது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கோடீஸ்வரன் குற்றம் சாட்டினார்.கோட்டையில் அதிரடி கிளப்பும் விஜய்! ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு 'செக்'... சடசடவென மாறப்போகும் கேபினட்!​

we-r-hiring

​ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொள்ளும் த.வெ.க?
“ஊழல்வாதிகளை எதிர்த்துப் போராடுவோம் என்று அரசியலுக்கு வந்த த.வெ.க, மற்ற கட்சிகளில் உள்ள ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வது முரணானது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றவர்கள் ஏன் த.வெ.க-வில் சேர்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? இது விஜய் அண்ணா மன்றத் தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, சுயநலத்திற்காக வருபவர்களைச் சேர்ப்பது போன்றது” என்று அவர் எச்சரித்தார்.

​உள்ளாட்சித் தேர்தலும் எதிர்காலச் சவால்களும்
வரும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கிய பயணத்தில், த.வெ.க-வில் சேரும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி முன்னாள் நிர்வாகிகள், கட்சியின் கொள்கையை விடத் தங்கள் சுய லாபத்திற்காகவே பதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார். “கொள்கை கோட்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில், இன்று பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கூட்டணிகள் அமைப்பதும், மாற்றுக் கட்சியினர் சேருவதும் வருத்தமளிக்கிறது. இது த.வெ.க-வின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.

​துணிச்சலான முடிவுகளை எடுப்பாரா விஜய்?
அமைச்சரவை மாற்றத்தின் மூலம், தான் மட்டுமே உண்மையான அரசியல் அதிகார மையம் என்பதை விஜய் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய கோடீஸ்வரன், “இதுவரை நீட் தேர்வு, காவிரி நீர் விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விஷயங்களில் த.வெ.க அரசு காட்டிய மென்மையான போக்கு மாற வேண்டும். எவ்வித சமரசமும் இன்றி, சர்ச்சைக்குரிய அமைச்சர்களை நீக்கிவிட்டு, துணிச்சலான நிர்வாகத்தை வழங்கினால் மட்டுமே மக்கள் மத்தியில் விஜய் தனது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்” என்று தனது நேர்காணலை முடித்தார்.

அடேங்கப்பா 77% சரிவா? முதலீடுகள் போச்சே… தமிழக தொழில்துறைக்கு என்ன ஆச்சு? முன்னாள் அமைச்சர் விளாசல்!

MUST READ