Homeசெய்திகள்தமிழ்நாடுவீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)...

வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் R. வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது:
கம்யூனிஸ்ட் கட்சியின் குரல் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்த வழக்கில் காவல் துறையினரின் மெத்தனப் போக்கையும், வழக்கை மூடி மறைக்க முயன்ற பின்னணியையும் கடுமையாகச் சாடினார்:

we-r-hiring

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள இந்த கொடூரக் குற்றத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னணியில் எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கோ அல்லது அதிகார பலமோ இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரமணிக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:
அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை:வழக்கில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்துப் நபர்களையும், சாட்சியங்களை மறைக்க முயன்ற இடைத்தரகர்களையும் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

காவல் துறை உயரதிகாரிகள் மீது விசாரணை:
ஆரம்பக் கட்டத்தில் வழக்கை மூடி மறைக்க முயன்ற காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு & நீதி:
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

அரசியல் களத்தில் தொடரும் அதிர்வலைகள் முன்னதாகப் போக்சோ நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுக்குப் பிறகே இந்த வழக்கில் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI & CPI-M), பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கிப் போராடி வருவதால், ஜெம் வீரமணி வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எத்தனை வருஷம் ஆனாலும் தப்பு பண்ணா மாட்டிப்போம்னு பயம் வரணும்!– ஜெம் வீரமணி விவகாரத்தில் கொதித்தெழுந்த சௌமியா அன்புமணி!

MUST READ