Homeசெய்திகள்தமிழ்நாடுகுரியன் ஜோசப் குழுவைக் கலைத்த தவெக அரசின் செயல் மாநிலங்களின் நலனுக்கு எதிரானது! – கே....

குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த தவெக அரசின் செயல் மாநிலங்களின் நலனுக்கு எதிரானது! – கே. சுப்பராயன் எம்.பி. கண்டனம்

-

- Advertisement -

குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்து தமிழக வெற்றிக் கழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி, போதிய அதிகாரமின்றி தவித்து வரும் ஒட்டுமொத்த மாநிலங்களின் நலன்களுக்கும் எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. சுப்பராயன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து ஆணை பிறப்பித்த தவெக அரசின் செயல், தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது மட்டுமல்ல; போதுமான அதிகாரமின்றி அல்லல்படும் ஒட்டுமொத்த மாநிலங்களின் நலன்களுக்கும் எதிரானதாகும்.

இந்தச் செயலை ஒரு குற்றச் செயலாகவே கருத வேண்டியுள்ளது. மாநில அரசுகளால் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாத அதிகாரக் குறைபாடு நிலவுகிறது.

குரியன் ஜோசப் குழு நல்ல, ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்கியிருக்கும். ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகப் போராடுவதற்கு அந்தப் பரிந்துரைகள் ஒரு நல்ல ஆயுதமாகப் பயன்பட்டிருக்கும்.

அதிகாரப் பற்றாக்குறையால் மக்களுக்கான பணிகளை விரைவாகச் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை, தவெக அரசால் வெற்றிகரமாக வழிநடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலை காலம்தான் சொல்லும்.

குரியன் ஜோசப் குழுவைக் கலைத்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார் இந்த டம்மி முதல்வர்” – உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

MUST READ