மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுகவின் தெளிவற்ற நிலைப்பாடு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மறுவரையறை: அடுத்த 75 ஆண்டுகால அடிமைத்தனமா?
”காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரங்கள் பருவகாலப் பிரச்சனைகள். ஆனால், தொகுதி மறுவரையறை என்பது அடுத்த 75 ஆண்டுகால தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தையே மாற்றக்கூடியது. வட இந்தியாவின் அரசியல் ஆதிக்கத்திற்கு அடிமையாகும் சூழலை உருவாக்கும் இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?” என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் மௌனமும், இஸ்லாமியர்களின் அச்சமும்!
மக்களவையில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவான நிலையில் இருக்கும் ஒரே மாநிலக் கட்சி திமுக மட்டுமே என்று சுட்டிக்காட்டிய அவர், “திமுக தனது வெற்றிக்காக இஸ்லாமிய மக்களின் வாக்குகளை நம்பியிருக்கிறது. அப்படி இருக்கும்போது, மறுவரையறையின் மூலம் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டால், திமுக அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? அசாமில் என்ன நடந்தது என்பது திமுகவிற்கு நன்றாகத் தெரியும்; அந்த நிலை தமிழகத்திற்கும் வரக்கூடாது என்பதில் திமுக அக்கறை காட்டுகிறதா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பாஜகவுடன் இணைகிறதா திமுக?
மறுவரையறையில் 50 சதவீத இடங்கள் மாற்றியமைக்கப்பட்டால், பாஜகவுடன் திமுக கைகோர்க்குமா என்ற அதிரடி கேள்வியையும் அவர் எழுப்பினார். காயிதே மில்லத் காலத்திலிருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்த இயக்கம் திமுக. அந்த வரலாற்றைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை அந்த கட்சிக்கு இருக்கிறது என்றும், இதற்கான தெளிவான பதிலை இஸ்லாமிய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் திமுக சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ”தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகள் தேவைப்படும் இஸ்லாமிய சமூகத்திற்கு, தொகுதி மறுவரையறை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளில் திமுக உரிய பாதுகாப்பு அளிக்குமா?” என்ற ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இந்தக் கேள்விகள், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரம் ‘ஜனநாயகன்’ பட வசூல் சரிவு: முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்த பின்னடைவுகள்!
