Homeசெய்திகள்தமிழ்நாடுதிருக்கோவிலில் சிவப்பு கம்பளம் முதல் பே கோபுர அனுமதி வரை: திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா...

திருக்கோவிலில் சிவப்பு கம்பளம் முதல் பே கோபுர அனுமதி வரை: திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனமும் எழும் விவாதங்களும்!

-

- Advertisement -

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அமைச்சரின் வருகையை ஒட்டி நகரில் மேற்கொள்ளப்பட்ட பிரத்யேக ஏற்பாடுகளும், கோயிலுக்குள் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளமும் தற்போது ஆன்மீக வட்டாரங்களிலும் பொதுமக்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

திருக்கோவிலில் சிவப்பு கம்பளம் முதல் பே கோபுர அனுமதி வரை: திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனமும் எழும் விவாதங்களும்!

we-r-hiring

 

ஹெலிபேட்டில் வந்திறங்கிய அமைச்சர்!
கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமுலை அம்மன் நகரில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் கார்கள் புடைசூழ அண்ணாமலையார் கோவிலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

நித்தியானந்தா சீடர்கள் அப்புறப்படுத்தல்!
அமைச்சர் பே கோபுரம் வழியாகச் சாமி தரிசனத்திற்குச் செல்லவிருந்த நிலையில், அதற்கு எதிரே அமைந்துள்ள ‘கைலாசா திருவண்ணாமலை ஸ்ரீ நித்தியானந்தா ஜன்ம பூமி ஸ்தலம்’ முன்பாக அமைச்சரை வரவேற்கும் நோக்கில் பல்வேறு புத்தகங்களுடன் அவரது சீடர்கள் கூடி நின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாகக் காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளே அனுப்பினர்.

திருக்கோவிலில் சிவப்பு கம்பளம் – எழுந்துள்ள கேள்விகள்!
அமைச்சரை வரவேற்கும் விதமாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் பல இடங்களில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆன்மீகத் தலங்களைப் பொறுத்தவரை சாமி சன்னதியில் அனைவரும் சமம் என்ற நியதி நிலவும் சூழலில், நாட்டின் உள்துறை அமைச்சருக்காகக் கோவிலுக்குள் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை உத்தரவை மீறிய பே கோபுர அனுமதி!
கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மேற்கு கோபுரம் எனப்படும் பே கோபுரம் வழியாக சிவாச்சாரியார்கள், விஐபிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்கப்படாமல் கடுமையான தடை நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது மத்திய அமைச்சரின் வருகைக்காக அந்தப் பே கோபுரம் பிரத்யேகமாகத் திறக்கப்பட்டு, அதன் வழியே அவர் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளன.

அமைச்சரின் இந்தப் பயணத்தையொட்டி திருவண்ணாமலை நகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொகுதி மறுவரையறை குறித்த விவாதம்: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக, தேமுதிக அறிவிப்பு!

MUST READ