Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி விவகாரத்தில் அரைகுறை ஆட்டம்:  தவெக ஆட்சியின் மீது மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் அனல் பறக்கும்...

காவிரி விவகாரத்தில் அரைகுறை ஆட்டம்:  தவெக ஆட்சியின் மீது மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் அனல் பறக்கும் தாக்கு!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், மேகதாது அணைப் பிரச்சனை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) போன்ற அதியுன்னதப் பிரச்சினைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் வழங்கியுள்ள அதிரடியான பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் எட்டப்பட்ட தெளிவான தீர்ப்பைக் கூட எதிர்கொள்ளத் திராணியில்லாமல், ஆளுங்கட்சி அரைகுறைத்தனமாகச் செயல்படுவதை அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.காவிரி விவகாரத்தில் அரைகுறை ஆட்டம்:  தவெக ஆட்சியின் மீது மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் அனல் பறக்கும் தாக்கு!

காவிரி விவகாரம்: செட்டில் ஆன வழக்கில் செப்பனிடும் நாடகம்!
காவிரி மேலாண்மை விவகாரம் குறித்துப் பேசிய சிவப்பிரியன், “காவிரி என்பது 1990-களின் நடுப்பகுதியிலும், 2007 மற்றும் 2013-களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் முழுமையாகத் தீர்த்து வைக்கப்பட்டுவிட்ட (Settled Issue) ஒரு விஷயம். கர்நாடகா அரசு மாதாந்திரத் தண்ணீரை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எஞ்சியுள்ள ஒரே சட்டப்பூர்வ நடவடிக்கை. இதற்காகத் கர்நாடகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குப் போய்விட்டு, அது பக்ஃபயர் ஆன உடனே ‘நானே பொறுப்பு’ என்று தப்பிக்கப் பார்ப்பது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இதற்கு முந்தைய மூன்று முதலமைச்சர்களும் கடைப்பிடித்த உறுதியான கொள்கை முடிவை விடுத்து, தமிழகத்தின் உரிமையைச் சீட்டுக்கட்டு போலத் தாரைவார்ப்பது மன்னிக்க முடியாத தவறு” என்று விளாசியுள்ளார்.

we-r-hiring

புதிய அமைச்சரவையின் நிர்வாகத் திணறல்:
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் புதியவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒரு கோப்பைக் கையாள்வதிலும், அரசாங்கத்தின் கோப்புகளைப் படித்து முடிவெடுப்பதிலும் உள்ள நுணுக்கங்கள் அனுபவத்தால் மட்டுமே வரும். ஆரம்பக்கட்டத் தடுமாற்றங்கள் இயல்பு என்றாலும், மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில் ஆளுங்கட்சி இன்னும் அதிக கவனத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

திர்க்கட்சிகளின் மௌனமும் ஜனநாயகத்தின் தேவையும்:
எதிர்க்கட்சிகளின் பங்கு குறித்துப் பேசிய அவர், “அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் தங்களின் சட்டப்பேரவை எண்களின் குறைபாட்டைக் கடந்து, இன்னும் ஆக்கப்பூர்வமாகவும் அழுத்தமாகவும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஆளுங்கட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால்தான் ஜனநாயகம் தழைக்கும்” எனத் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்திலும், நிர்வாகத் திறனிலும் தவெக அரசு காட்டும் தொய்வு மற்றும் தடுமாற்றங்கள், எதிர்காலத்தில் ஆளுங்கட்சிக்கு மிகப் பெரிய அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும் என இந்த நேர்காணல் மூலமாக வலுவான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு மற்றும் வழக்கறிஞர் மரணம்: அரசின் நேர்மையைக் கேள்வி எழுப்பும் ‘தவெக’ முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்!

MUST READ