Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் - முதல்வர்...

அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

​தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்க முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் - முதல்வர் அதிரடி உத்தரவு!

​​அமைச்சர் விக்னேஷ் மீது எழுந்துள்ள தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு, மாநில உளவுத்துறை ஐ.ஜி. அசரா கார்கிடம் தமிழக முதல்வர் ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்ததாகக் கூறப்படுகிறது. “இந்த அமைச்சரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, வலுவான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை என்னிடம் ஒப்படையுங்கள், இது மிகவும் ரகசியமானது” என முதல்வர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

​அமைச்சர் விக்னேஷ் மீது சுமத்தப்பட்டுள்ள முதன்மையான இரண்டு குற்றச்சாட்டுகள் வருமாறு, ​’கரூர் கம்பெனி’யின் ஆதிக்கம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலத்தில் இயங்கி வந்த ‘கரூர் கம்பெனி’ குழுவினர், தற்போதைய மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷை தங்களுக்கு சாதகமாக இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் மற்றும் எஃப்.எல்.2 பார்களில் இருந்து பெருமளவு மாமூல் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கு அமைச்சர் ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட நபர்களைச் சந்தித்து பணம் கொடுத்தால் காவல் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்றுத் தரப்படுவதாகத் தெரிகிறது.அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் - முதல்வர் அதிரடி உத்தரவு!​பணம் கேட்டு மிரட்டல்
மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், ஒரு பெட்டி மதுபானத்திற்கு குறிப்பிட்ட தொகை லஞ்சமாகத் தர வேண்டும் என அமைச்சர் விக்னேஷ் தரப்பில் நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிகிறது. நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அதிகாரிகளை ஏவி அந்த நிறுவனத்தை சட்டவிரோதமாக மூடியதாகவும் புகார் எழுந்துள்ளது.

​அமைச்சரவை மாற்றத்திற்கான வாய்ப்பு
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் முதலமைச்சரின் மேசைக்குச் சென்றுள்ளதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, தற்போதைய அமைச்சரவையில் இருந்து விக்னேஷ் விரைவில் நீக்கப்படலாம் அல்லது பதவி மாற்றம் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ​தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையில் நிகழ்ந்துள்ள இந்தச் சூழல், ஆளும் தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: காவிரி விவகாரம் திசை திருப்பப்படவில்லை – திருமாவளவன் விளக்கம்!

MUST READ